வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2021- ம் ஆண்டு பிச்சைக்காரர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த பாபு ஷேக் (55) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரனை வேலூர் கூடுதல் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது கடந்த 03-11-2023 ம் அன்று ஆயுள் தண்டனை(20 வருடம்) தீர்ப்பளிக்கப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் அவருக்கு இரண்யா என்ற உடல்நிலை குறைவு காரணமாக கடந்த 15 ஆம் தேதி சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாா்.
மருத்துவமனையில் கை விளங்குடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று காலை 5 மணி அளவில் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடியுள்ளாா். தப்பிய ஓடிய கைதியை காவல் துறையினர் பின் தொடர்ந்து துரத்தி சென்ற நிலையில் அடுக்கம்பாறை பகுதியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள நெல்வாய் ஏரிக்குள் நுழைந்து ஓடி உள்ளார். இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு புகாரின் பேரில் தனி பிரிவு அமைக்கப்பட்டு தப்பி ஓடிய கைதியை காவல்துறையினர் தீவிரமாக தேடிவரும் நிலையில் ஏரி பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு செய்ததில் நேற்று கைதி தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவமனையில் கைதியின் பாதுகாப்பு பணியில் இருந்த நான்கு காவலர்களான பொற்க்கை பாண்டியன், கோகுல், சத்தியமூர்த்தி, கண்ணண், ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழகத்தில் 70 லட்சம் ரேஷன் கார்டுகள் ரத்தாகும் அபாயம்: மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!