நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் ஜெகதீஸ்வரன் இறந்ததால், அவரது தந்தையும் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்!
அதில், “மாணவர்களின் உயர்வுக்கு தடைக்கல்லாக இருக்கும் நீட் தேர்வு முறையை நிச்சயம் நீக்க முடியும். நீட் தேர்வை நீக்கும் சட்ட ரீதியிலான முயற்சியில் தான் அரசுத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. நீட் விலக்கு மசோதாவுக்கு கையெழுத்து இடமாட்டேன் என்ற ஆளுநரின் பேச்சில் அறியாமை தான் உள்ளது. அரசியல் மாற்றம் நடக்கும் போது, கையெழுத்து போட மாட்டேன் என்பவர்கள் காணாமல் போவார்கள்.
திருப்பதியில் 15 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மலையேற தடை
நீட் தேர்வு விலக்கு மசோதாவை பொறுத்த வரையில் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆளுநரின் கையெழுத்துக்காக மசோதா காத்திருக்கவில்லை; அது குடியரசுத் தலைவரிடம் தான் உள்ளது. மாணவக் கண்மணிகளே, உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது; தன்னம்பிக்கை கொள்ளுங்கள். வாழ்ந்துக் காட்டுங்கள்; பிறரையும் வாழ வையுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம்.
77-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு!
மாணவன் ஜெகதீஸ்வரன் மற்றும் அவரது தந்தை செல்வசேகர் ஆகிய இருவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.