
சென்னையில் இருந்து நெல்லை சென்ற வந்தே பாரத் ரயில் மீது கல்வீசியவர்களை ரயில்வே காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஆந்திராவில் வேட்டையன் படப்பிடிப்பு தீவிரம்
மணியாச்சி ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயில் சென்ற போது, அடையாளம் தெரியாத நபர்களால் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வந்தே பாரத் ரயிலில் உள்ள ஒன்பது பெட்டிகளின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளனர்.
நெல்லை ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர், சேதமடைந்த ரயில் பெட்டிகளின் கண்ணாடிகள் மாற்றப்பட்டது. சம்பவம் நடைபெற்றதாகக் கருதப்படும் மணியாச்சி ரயில்வே பாதையில் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள், ரயில்வே காவல்துறையினர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது யார்? எதற்காக தாக்குதல் நடத்தப்பட்டது? தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரியில் இ.பி.எஸ். பேனர் கிழிப்பு!
இதனிடையே, இன்று (பிப்.05) காலை வழக்கம்போல் நெல்லையில் இருந்து சென்னை நோக்கி வந்தே பாரத் ரயில் புறப்பட்டுச் சென்றது.