spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபெரும் சோகம்! சாலை விபத்தில் கணவன் கண் முன்னே பலியான புதுமணப்பெண்!

பெரும் சோகம்! சாலை விபத்தில் கணவன் கண் முன்னே பலியான புதுமணப்பெண்!

-

- Advertisement -

Accident

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே கணவன் கண் முன்னே புதுமணப்பெண் சாலை விபத்தி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த ஹரிதாஸ்(24) என்பவருக்கும், சந்தியா(20) என்பவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் இருவரும் சென்னை மாதவரத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தனர். இந்த நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு கணவன் – மனைவி மற்றும் ஹரிதாஸின் தந்தை மூவரும் கோவிலுக்கு சென்றுவிட்டு மாதவரத்தில் இருந்து திண்டிவனத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். மூன்று பேர் ஒரே பைக்கில் சென்றுகொண்டிருந்ததால் திடீரென நிலைத்தடுமாறிய அந்த வாகனம் திடீரென சாலையில் சரிந்தது. இதில் மூவரும் சாலையில் விழுந்த நிலையில், அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து சாலையில் தனியாக கிடந்த சந்தியா மீது ஏறி இறங்கியது.

இதில் சந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் ஹரிதாஸ் மற்றும் அவரது தந்தை படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சாமப்வம் இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் உயிரிழந்த சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ