பொங்கலையொட்டி வாடிக்கையாளர்களின் கோரிக்கையினை ஏற்று ஆவினில் புதிய அறிமுகமாக 50மி.லி.நெய்ஜாரை அறிமுகம் செய்துள்ளது.
ஒவ்வொரு பொங்கல் திருநாளையும் ஆவினின் நெய் மற்றும் இனிப்பு வகைகளுடன் கொண்டாடி வரும் அனைத்து பொதுமக்களுக்கும் ஆவினின் வாடிக்கையாளர்களுக்கும், மேலும் ஒரு தித்திக்கும் செய்தியாக வாடிக்கையாளர்களின் கோரிக்கையினை ஏற்று புதிய அறிமுகமாக 50மிலி நெய் ஜார், இந்த பொங்கல் திருநாளினை கொண்டாடும் விதமாக நமது ஆவின் அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 100மிலி, 200மிலி, 500லிட்டர், 1லிட்டர் மற்றும் 5லிட்டர் நெய் ஜார்களுடன் புதிதாக அழகிய வடிவமைப்பில் 50மிலி நெய் ஜார் ஒன்றுக்கு ரூ.48 என்ற விலையுடன் தற்பொழுது அனைத்து ஆவின் பாலகங்கள் மற்றும் விற்பனை மண்டலங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் ஆவின் வாடிக்கையாளர்கள் இந்த புதிய 50மிலி நெய் மற்றும் ஆவினின் மைசூர்பா, பால்கோவா உடன், பிற பால் பொருட்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் வாங்கி இந்த பொங்கல் திருநாளை ஆவினுடன் இணைந்து கொண்டாட ஆவின் கேட்டுக்கொண்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 வழங்காதது ஏன்? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!