தமிழ்நாடு அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதால் தான் நடப்பு ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1,000 ரூபாய் வழங்கவில்லை என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் மாரிமுத்து, தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்திருந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடந்த ஆண்டு மிக்ஜாம் புயல், பெருமழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டு நாம் மத்திய அரசிடம் ரூ.37,000 கோடி நிதி வேண்டும் என கேட்டிருந்ததாகவும், ஆனால் மத்திய அரசு வெறும் 276 கோடி ரூபாய் தான் வழங்கியதாக தெரிவித்தார்.
அதேபோல் சர்வ சிக்க்ஷா சம்க்ஷ்ரா திட்ட நிதி பள்ளி கல்வித்துறையில்ரூ. 2,155 கோடி இதுவரை விடுவிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இப்படி நிதி நெருக்கடியில் தமிழ்நாடு அரசு சிக்கி உள்ள காரணத்தினால் தான் நடப்பு ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1,000 ரூபாய் வழங்கவில்லை என பதில் அளித்தார்.