
ஊழல் செய்த அதிகாரிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடைமுறையை அனைத்து ஊழல் வழக்கிலும் பின்பற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு வரும் 26 வரை நீதிமன்ற காவல்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ரூபாய் 11.50 கோடி மதிப்பிலான 2,000 சதுர அடி நிலத்தை ரூபாய் 10 லட்சத்திற்கு வாங்கியதாக, அந்த மாவட்டத்தைச் சேர்ந்த விஏஓ ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி தனலட்சுமி மற்றும் மகன் ஆகிய மூன்று பேர் மீது குற்றப்பிரிவுக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கை ரத்துச் செய்யக் கோரி விஏஓ ராஜேந்திரன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “வழக்கை ரத்துச் செய்ய முடியாது; காஞ்சிபுரம் நீதிமன்றம் விரைந்து விசாரிக்க வேண்டும். சொத்துக்களைப் பறிமுதல் செய்வது குறித்த சட்ட மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்றம் சிந்திக்க வேண்டும். 24 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள மசோதாவை நாடாளுமன்றம் நிறைவேற்ற வேண்டும்” என்று கூறிய அவர், சொத்துக்களை முடக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
எடப்பாடி பழனிசாமி வழக்கில் காவல்துறை மன்னிப்பு கோரியது!
அத்துடன், ஊழல் செய்த அதிகாரிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யும் நடைமுறையை அனைத்து ஊழல் வழக்கிலும் பின்பற்ற வேண்டும்; தேவைப்பட்டால் அதிகாரிகளின் சொத்துக்களைத் தற்காலிகமாக முடக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.