ஒரு கட்சியை சார்ந்தவர் வேறு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது செல்லாது என்று அறிவிக்கக்கோரி வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது பெரம்பலூர் தொகுயில் போட்டியிட்ட பச்சைமுத்து (பாரிவேந்தர்), கணேசமூர்த்தி, ரவிக்குமார் ஆகியோர் ஈரோடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது கட்சி சின்னத்தை தவிர்த்து வேறு சின்னத்தில் போட்டியிட்டு எம்பியும் ஆனார்கள். இதுபோன்ற நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றன்ற நீதிபதிகள் திபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு உத்தரவை பிறப்பிக்க அதிகாரம் உள்ளது என்று தெரிவித்தார்.
அப்போது நீதிபதிகள்,” இதுபோன்ற மனுக்களை தேர்தல் நேரத்தில் தாக்கல் செய்யுங்கள். இப்போது விசாரிக்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.