ரயில் சேவை தொடங்குவதற்கான சான்றிதழ் கிடைக்காததால் பரங்கிமலை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை தாமதமாகிறது. 
சென்னையில் பரங்கிமலை – வேளச்சேரி இடையே இயக்கப்படவிருந்த பறக்கும் ரயில் சேவை தாமதமாகியுள்ளது. ரயில் சேவையை தொடங்குவதற்கான இறுதி சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் சேவை தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழித்தடத்தில் பறக்கும் ரயில் சேவை நாளை தொடங்கும் என முன்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேவையான அனுமதி மற்றும் பாதுகாப்பு சான்றிதழ் கிடைக்காததால் சேவை துவக்கம் தாமதமாகியுள்ளது.
இதற்கிடையில், வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் பாதையில் கடந்த மார்ச் 5ஆம் தேதி அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு செய்தார்.
சோதனைக்குப் பிறகு பாதுகாப்பு தொடர்பான சான்றிதழ் வழங்கப்பட வேண்டியுள்ளது. அந்த சான்றிதழ் கிடைத்த பிறகே இந்த பாதையில் ரயில் சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என ரயில்வே தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையின் முக்கியமான இணைப்பு திட்டங்களில் ஒன்றாக கருதப்படும் பரங்கிமலை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை திட்டம் சுமார் 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சான்றிதழ் கிடைத்தவுடன் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தது சூப்பர் அப்டேட்…சென்னையில் ஓட்டுநர் இல்லா ரயில் சேவை விரைவில் தொடக்கம்!
