spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாடாளுமன்றத்தில் அத்துமீறல்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

நாடாளுமன்றத்தில் அத்துமீறல்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

-

- Advertisement -

 

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
File Photo

நாடாளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி இருவர் நுழைந்த சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தமிழகத்தில் டிச.19- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் கண்ணீர் புகைக் குண்டுகளுடன் அத்துமீறி இருவர் நுழைந்ததற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2001- ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றதன் நினைவு தினமான இதே நாளில் இத்தகைய சம்பவம் நடந்திருப்பது வேதனைக்குரியது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு!

இந்திய இறையாண்மைக்கு சவால் விடும் இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதுடன், இந்திய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக வலிமைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ