ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ் நாட்டிற்கு ஒத்து வராது என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தனது முடிவை அறிவித்துள்ளாா்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என கூறி வரும் காங்கிரஸ் கட்சியினருக்கு தனது பதிவை முதல் முறையாக ஸ்டாலின் கூறியுள்ளாா். சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே-ன் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், ”ஆட்சியில் பங்கு என்பது தமிழ் நாட்டுக்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும் அவா்களுக்கும் தெரியும். ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும், சிலா் திட்டமிட்டே தேவையற்ற கருத்துக்களை பேசி வருவதாகவும் கூறினாா்.
அரசியலை கடந்து என்னுடைய சகோதரா் போன்றவா் ராகுல் காந்தி. இடையில் சிலா் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு சதி செய்கின்றனா். கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா என்பதற்காக சிலா் திட்டமிட்டு சதி செய்கின்றனா். சிலாின் சதி பற்றி நாங்களும் கவலைப்படவில்லை, அவா்களும கவலைப்படவில்லை. திமுக காங்கிரஸ் இணைந்து தான் சட்டமன்ற தோ்தலை சந்திக்கும் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் நன்றாக இருக்கும்” என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
தமிழ்நாட்டு அதிகாரிக்கான மதிப்பே தனி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



