spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

-

- Advertisement -

 

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
Photo: CM MKStalin

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையையொட்டி, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மலர் மாலை வைத்து, மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

we-r-hiring

ராமநாதபுரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

அதைத் தொடர்ந்து, அமைச்சர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் மரியாதைச் செலுத்தினர்.

தமிழக முதலமைச்சரின் வருகையையொட்டி, பசும்பொன்னில் 12,000 காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மருதுபாண்டியர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தேவர் ஜெயந்தியை அரசு விழாவாக நடத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. தேவர் பெயரில் பல்வேறு இடங்களில் கல்லூரிகள் அமைய காரணமாக இருந்தவர் கருணாநிதி. பசும்பொன்னில் இரண்டு மண்டபங்கள் அமைக்கப்பட உள்ளன. ராமநாதபுரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ