Homeசெய்திகள்தமிழ்நாடுமுத்துராமலிங்க தேவர் சிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

முத்துராமலிங்க தேவர் சிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!

-

- Advertisement -

 

முத்துராமலிங்க தேவர் சிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!
Photo: CM MKSTALIN Twitter Page

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 116-வது பிறந்தநாள் மற்றும் 61- வது குருபூஜையையொட்டி, மதுரை மாவட்டம், கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மலர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.

கேரள குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழப்பு 3 ஆக அதிகரிப்பு!

அதைத் தொடர்ந்து, சிலைக்கு அருகில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதைச் செலுத்தினார்.

முத்துராமலிங்க தேவர் சிலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை!
Photo: CM MKStalin

களமச்சேரி குண்டுவெடிப்பு- டொமினிக் மார்டின் வாக்குமூலம்!

இந்த நிகழ்வின் போது, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.சங்கீதா மற்றும் அரசு உயரதிகாரிகள் உடனிருந்தனர்.

MUST READ