spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்!"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

“அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்!”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!

-

- Advertisement -

 

"அவர் வாழ்வே ஓர் அரசியல் தத்துவம்!"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!
Photo: CM MKStalin

தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி, வேலூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.

we-r-hiring

என்கவுன்ட்டர் செய்யப்படும் முன்பு காவல் நிலையத்தில் பேசிக் கொள்ளும் வீடியோ வெளியீடு!

அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மொழி, நாடு, மதம் போன்றவற்றைக் கடந்து – மனிதநேயத்தையும் சுயமரியாதையையும் அடிப்படையாகக் கொண்ட அரசியலை வலியுறுத்திய மாபெரும் சீர்திருத்தவாதி அவர்.

தாம் எண்ணியவை எல்லாம் சட்டவடிவம் பெறுவதைப் பார்த்துவிட்டே மறைந்த பெருமை அவருக்கே உரித்தானது!

பெண் விடுதலைக்காகவும் சமத்துவச் சமுதாயத்துக்காகவும் நாம் இன்று தீட்டும் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படை பெரியாரியலே!

தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதில் என்ன சிக்கல்?- உயர்நீதிமன்றம் கேள்வி!

பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் ஆட்சியைப் போன்றே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சியும் எம் தந்தை பெரியாருக்கே காணிக்கை!” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ