அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்வதில் என்ன சிக்கல் என பல்கலைக்கழக நிர்வாகத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஐ.ஆர்.எஸ். பிரிவு அதிகாரியான ராகுல் நவீன் நியமனம்!
அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நிர்வாகக் காரணங்களுக்காக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் முன் வைத்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் நிரந்தர ஆசிரியர்கள் இல்லாமல், கல்வி நிறுவனங்கள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது என்றனர்.
விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்! மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்
மேலும், 12 ஆண்டுகளாகப் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்வதில் என்ன சிக்கல் உள்ளது. நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க ஏன் நேரடித் தேர்வு நடத்த முடியாது என நீதிபதிகள் அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினர். இவற்றிக்கு வரும் செப்டம்பர் 26- ஆம் தேதிக்குள் பதிலளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.