Homeசெய்திகள்தமிழ்நாடுதனிமனித ஒழுக்கத்தை முதலில் தனது கட்சியினருக்கு கற்பிக்க வேண்டும் -  விஜயை விமர்சித்த கனிமொழி

தனிமனித ஒழுக்கத்தை முதலில் தனது கட்சியினருக்கு கற்பிக்க வேண்டும் –  விஜயை விமர்சித்த கனிமொழி

-

- Advertisement -

தனிமனித ஒழுக்கம் குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கும் முதல்வர் விஜய், முதலில் தனது கட்சியினருக்கு அதனை எடுத்துரைக்க வேண்டும் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி தெரிவித்துள்ளார்.தனிமனித ஒழுக்கத்தை முதலில் தனது கட்சியினருக்கு கற்பிக்க வேண்டும் -  விஜயை விமர்சித்த கனிமொழி

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ”சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர் தவெக நிர்வாகியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டத்தில் தவெக நிர்வாகிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண், குற்றச்சாட்டுக்குள்ளானவர்களை கட்சியினர் காப்பாற்ற முயற்சிப்பதாக கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

we-r-hiring

அண்மையில் சிறப்பு படை ஒன்றை தொடங்கி வைத்து தனிமனித ஒழுக்கம் குறித்து பேசிய முதல்வர் விஜய், அந்த ஒழுக்கத்தை முதலில் தனது கட்சியினரிடமே நடைமுறைப்படுத்த வேண்டும்” என கனிமொழி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் தோல்வி – மாவட்ட வாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

MUST READ