spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநாளை மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

நாளை மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

-

- Advertisement -

 

மூன்று நாள் சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கும் பிரதமர் நரேந்திர மோடி!
Photo: ANI

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நடப்பாண்டில் ஐந்தாவது முறையாக நாளை (மார்ச் 15) பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.

we-r-hiring

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- என்னென்ன பரிந்துரைகள்?

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கேரள மாநிலம், திருவனந்தபுரத்திற்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்கவுள்ளனர்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகைக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் விவேகானந்தர் கல்லூரிக்கு செல்கிறார். நாளை (மார்ச் 15) காலை 11.15 மணி முதல் நண்பகல் 12.15 மணி வரை விவேகானந்தர் கல்லூரியில் நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

குடியுரிமை வேண்டுவோர் விண்ணப்பிக்க இணையதளம் தொடக்கம்!

பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, வரும் மார்ச் 18- ஆம் தேதி கோவை, மார்ச் 19- ஆம் தேதி சேலம் வருகை தரவுள்ளார்.

MUST READ