spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"பிரதமரின் வருகையால் தமிழ்நாட்டுக்கு பயன் உண்டா?"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

“பிரதமரின் வருகையால் தமிழ்நாட்டுக்கு பயன் உண்டா?”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

-

- Advertisement -

 

"பிரதமரின் வருகையால் தமிழ்நாட்டுக்கு பயன் உண்டா?"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

we-r-hiring

தருமபுரி மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 8,736 பயனாளிகளுக்கு ரூபாய் 560.23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதேபோல், ரூபாய் 114.19 கோடி மதிப்பில் 75 திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகளின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி!

விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தருமபுரி மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்கியதில் நான் முக்கிய பங்காற்றியுள்ளேன். நான் அமைச்சராக இருந்த போது ரூபாய் 1,928 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. ஆட்சி மாறியவுடன் ஓகேனக்கல் திட்டம் கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து நானே போராட்டம் நடத்தினர்.

தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் முறையாக சென்றடைகிறதா என்பதை அறிய நீங்கள் நலமா திட்டம்? மக்களின் குறைகளைத் தீர்க்க அடுத்தடுத்து திட்டங்களை நிறைவேற்றும் திராவிட மாடல் அரசு இது. மகளிர் உரிமைத் தொகை மு.க.ஸ்டாலின் அண்ணன் கொடுத்த சீர் என ஒரு பெண்மணி பேசியிருந்தார்.

தேமுதிகவில் ஐ.டி.விங் உருவாக்கம் – பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

பிரதமரின் பயணத்தால் தமிழ்நாட்டில் ஏதேனும் பயன் உண்டா? மாநிலங்களை மத்திய அரசு சமமாக நடத்துவதில்லை. மத்திய அரசு மாநிலங்களின் நிதி ஆதாரத்தைப் பறித்து அழிக்க நினைக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ