Homeசெய்திகள்தமிழ்நாடு50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்ததும் அரசியல் கட்சி - பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்ததும் அரசியல் கட்சி – பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!

-

- Advertisement -

“தமிழகத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவது உறுதி; அதற்கு ‘We The Leaders’ அமைப்பில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணையும் வரை காத்திருக்க வேண்டும்” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும் ‘We The Leaders’ அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலை பேசியுள்ளார்.50 லட்சம் உறுப்பினர்கள் இணைந்ததும் அரசியல் கட்சி - பொள்ளாச்சி மாநாட்டில் அண்ணாமலை அதிரடி அறிவிப்பு!​கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் அண்ணாமலையின் ‘We The Leaders’ அமைப்பு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாநாடு நடைபெற்றது. முப்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் அண்ணாமலை ஆற்றிய உரை வருமாறு:

​இது கட்சி அல்ல, மக்கள் புரட்சி!
​”‘We The Leaders’ அமைப்பு என்பது ஒரு அரசியல் கட்சி அல்ல; இது ஒரு மக்கள் புரட்சி. சமூகப் பிரச்சினைகளுக்கு அரசு மட்டுமே தீர்வு வழங்க வேண்டும் என்று நாம் காத்திருக்காமல், நாமே தீர்வாக மாற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் இந்த இயக்கம். தற்போது 19 லட்சம் பேர் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர். இது எனது குடும்பத்திற்குச் சொந்தமான அமைப்பு அல்ல, உங்களுக்குச் சொந்தமானது. இதில் இணையுமாறு நான் யாரையும் அழைக்கவில்லை. எந்தவித அழைப்பும் இன்றி இவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் திரண்டு வந்திருக்கிறது என்றால், அது நல்லது செய்ய வேண்டும் என்ற உங்களின் எண்ணத்தையே காட்டுகிறது. ​இந்த மாநாட்டை நடத்தியதன் மூலம் நமது நோக்கத்தின் 50 சதவீதத்தைத் தாண்டிவிட்டோம் என்று நம்புகிறேன். உறுப்பினர் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டும்போது தமிழக மக்கள் நம்மை முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள் என்று அர்த்தம். நீங்கள் நினைத்தால் ஒரே வாரத்தில் கூட இந்த எண்ணிக்கையைச் சாதிக்க முடியும். ஆனால், நமக்குத் தேவை தற்காலிக வேகம் அல்ல, நிரந்தரமான வளர்ச்சிதான்.

we-r-hiring

​அடுத்த 6 மாத கால இலக்கு
​நமது அமைப்பின் அடுத்த ஆறு மாதங்களுக்கான இலக்கு தெளிவாக உள்ளது. வரும் ஜூலை 26-ஆம் தேதி திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன். தொடர்ந்து, ஆகஸ்ட் மாதம் சுற்றுச்சூழல், செப்டம்பர் மாதம் பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட 6 முக்கியப் பிரச்சினைகளை முதன்மையாக வைத்து மக்களை நேரில் சந்தித்துப் பேசவுள்ளோம். ​பொதுவாக அரசியல் கட்சிகளில் பெண்களின் பங்கு 5 சதவீதத்தைத் தாண்டாது. ஆனால், நமது அமைப்பில் உள்ள 19 லட்சம் உறுப்பினர்களில் 17 சதவீதம் பேர் பெண்கள் என்பது பெருமைக்குரியது. அதேபோல், 18 முதல் 25 வயது வரை 14 சதவீதமும், 25 முதல் 36 வயது வரை 40 சதவீதமும் என 39 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் 54 சதவீதம் பேர் உள்ளனர். இளைஞர்கள்தான் இந்த இயக்கத்தின் அசைக்க முடியாத பலம்.

​டாஸ்மாக் கடைகளை மக்களே மூடுவார்கள்!
​இது பிற அரசியல் கட்சிகளைத் திட்டுவதற்கோ அல்லது ஆட்சியில் இருப்பவர்களுக்கு இடையூறு செய்வதற்கோ நடத்தப்படும் மாநாடு அல்ல. நிலையான சமூக மாற்றத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். தமிழகத்தில் இன்று நான்கு பேரில் ஒருவர் மது அருந்துகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறை, குடும்பச் சீரழிவு, சாலை விபத்துகள் எனப் பல்வேறு குற்றங்களுக்குப் பின்னணியில் மதுவும் கஞ்சாவும் இருக்கின்றன. அடிப்படையிலிருந்தே மதுவை ஒழிக்க வேண்டும். கஞ்சா புழக்கத்தைக் காவல்துறையால் மட்டுமே தடுத்துவிட முடியாது, பொதுமக்களும் களம் இறங்க வேண்டும். ​தமிழக அரசு 2025-ஆம் ஆண்டில் மது ஒழிப்பு தூதுவர்களை உருவாக்கியது. அது ஒவ்வொரு கல்லூரியிலும் செயல்பாட்டிற்கு வர வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 500 மீட்டர் சுற்றளவில் டாஸ்மாக் கடைகள் இருந்தால் அவை உடனடியாக மூடப்பட வேண்டும். அரசு இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மக்களே நேரடியாகச் சென்று டாஸ்மாக் கடைகளை மூடும் நடவடிக்கையை முன்னெடுப்பார்கள். ​‘We The Leaders’ அமைப்பு ஆரோக்கியமான அரசியல் இயக்கமாக மாறும். அதிகார அரசியலுக்காக அல்ல, ஆரோக்கியமான அரசியலுக்காகவே நாங்கள் நிற்கிறோம். சாதியும் மதமும் இந்த அமைப்பிற்கு வெளியே உள்ளவை. வீட்டை விட்டு வெளியே வரும்போது மதத்தையும், சாதியையும் வீட்டிலேயே வைத்துவிட்டு, ஒரு மனிதனாக, இந்தியனாகப் பெருமிதத்துடன் வெளியே வருகிறேன்.

​அக்டோபரில் பயிற்சி மையம்; Z+ பாதுகாப்பு மறுப்பு
​நேர்மையானவர்கள் அதிகாரத்திற்கு வரும்போதுதான் அரசியலில் உண்மையான மாற்றம் ஏற்படும். அதற்கேற்ப நல்ல சேவை செய்யும் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை அமைச்சர்களாக உருவாக்குவோம். இதற்காக வரும் அக்டோபர் 15-ஆம் தேதி கோவையில் ஒரு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மையம் தொடங்கப்படும். ஓராண்டில் 1.15 லட்சம் பேருக்கு அங்கு பயிற்சி அளிக்கப்படும். ​தமிழக அரசு இந்த ஆண்டு 85 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், அடுத்த ஆண்டு 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறையாமல் கடன் வாங்கப் போகிறது. இந்தச் சூழலை மாற்றி, ஆரம்ப சுகாதார நிலையங்களையும், கல்வி நிலையங்களையும் உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும். இதன் முதற்கட்டமாக அடுத்த மாதம் 50 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். ​உண்மையான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, வேளாண்மை எழுச்சி, பண்பாட்டு மீட்சி, ஆட்சியில் புரட்சி ஆகிய ஐந்துமே நமது முக்கிய நோக்கங்கள். பாஜகவில் இருந்து வெளியேறிய பிறகு எனக்கு வழங்கப்பட்ட Z+ பாதுகாப்பைத் திரும்பப் பெறக் கோரி அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். நாங்கள் அந்தப் பாதுகாப்பைப் பயன்படுத்தவில்லை. மேலும், தொழிலாளர்களின் நலனுக்காக “என் மண், என் மக்கள்” தொழிற்சங்கப் பேரவையைத் தொடங்கியுள்ளோம், அதில் தொழிலாளர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.” ​இவ்வாறு அண்ணாமலை தனது உரையில் குறிப்பிட்டடுளார்.

6 மாதத்தில் ஸ்டாலின் மீண்டும் முதல்வர்; தவெக ஆட்சி நீடிக்காது: வல்லநாடு பொதுக்கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடி பேச்சு!

MUST READ