
பிழைப்புக்காக வெளியூர்களிலும், வெளி மாநிலங்களிலும் தங்கியிருந்தாலும், பொங்கல் பண்டிகை என்றால் சொந்த ஊரில் உற்றார் உறவினருடன் கொண்டாடவே பெரும்பாலானவர்கள் விரும்புவர். இதற்காக, இந்தாண்டும் சொந்த ஊர்களை நோக்கிச் செல்லும் மக்களால் பிரதான சாலைகள் போக்குவரத்து நெரிசலுடன் காணப்பட்டன.
வெற்றி நடை போடும் சிவகார்த்திகேயனின் அயலான்….. ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம்?
சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி மக்கள் படையெடுத்து வருகிறார்கள். சொந்த வாகனங்களிலும், பேருந்துகள் மூலமும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பயணப்பட்டனர். சென்னையில் இருந்து வெளியேறும் முக்கிய வழியான தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோயில் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக, வாகனங்கள் ஊர்ந்துச் சென்றனர். விழுப்புரம் அருகே உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணி வகுத்துச் சென்றனர். அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் ஊர்ந்துச் சென்றனர்.
கமல் – பிக்பாஸ் மாயா குறித்த சர்ச்சை பேச்சு…. மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட புகழ், குரேஷி!
தமிழகம்- கர்நாடகா மாநில எல்லையான ஓசூரில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வாகனங்கள் கடக்க, ஒரு மணி நேரத்திற்கும் மேலான நேரம் ஆனது.