பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று பிற்பகல் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது
இது தொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூரில் இருந்து இன்று பிற்பகல் 2.15 மணிக்கு மதுரைக்கு ஒரு வழி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை ஓட்டி பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்பதற்காக இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயங்கப்படுவதாகவும் தென்னக ரயில் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, வண்டி எண் 06161 ரயிலானது இன்று பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரை ரயில் நிலையம் சென்றடையும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.