spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகேப்டன் விஜயகாந்தை AI மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள் - பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!

கேப்டன் விஜயகாந்தை AI மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள் – பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!

-

- Advertisement -

தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல் வெளியானது!

கேப்டன் விஜயகாந்தை AI மூலம் படங்களில் பயன்படுத்தாதீர்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரை உலகை சேர்ந்த அனைவருக்கும் அன்பான வேண்டுகோள், புரட்சிக் கலைஞர் கேப்டனை ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வருகிறது. எனவே இதுபோன்ற செய்திகள் ஆடியோ வெளியீட்டு விழாவில் வருகின்றது. எங்களிடம் முன் அனுமதியில்லாமல் இது மாதிரியான அறிவிப்புகள் வருவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

பிரேமலதா விஜயகாந்த்

எந்த விதத்தில் பயன்படுத்துவதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற்ற பின்பே, அறிவிப்பை வெளியிட வேண்டும். ஏஐ தொழில்நுட்பத்தின் (AI TECHNOLOGY) மூலம் திரைப்படங்களில் பயன்படுத்த இருப்பதாக இதுவரை யாரும் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதை நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம். எனவே அனுமதியில்லாமல் பத்திரிகை செய்திகள், ஊடக செய்திகள், ஆடியோ வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ