தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் அன்புத் தாயாரான அம்சவேணி மறைவிற்கு தலைவர்கள் ஆழந்த இரங்கலை தனது வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்து வருகின்றனா்.மு.க.ஸ்டாலின்
”தே.மு.தி.க. பொதுச் செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் தாயார் அம்சவேணி மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். பெற்றெடுத்து அன்பு செலுத்தி வளர்த்த அன்னையை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.கவின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட அவர்களது குடும்பத்தினர் அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

கமலஹாசன்“தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரின் அன்புத் தாயாரான அம்சவேணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து துயருற்றேன்.“ என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பியுமான கமலஹாசன் தனது வலைத்தளப்பக்கத்தில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா் .
டி.டி.வி.தினகரன் “தேமுதிக பொதுச்செயலாளர் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுடைய தாயார் அம்சவேணி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தாயாரை இழந்துவாடும் சகோதரி பிரேமலதா விஜயகாந்த், சகோதரர் L K சுதீஷ் ஆகியோருக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.
எடப்பாடி பழனிசாமி“தேமுதிக பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் L. K. சுதீஷ் ஆகியோரின் தாயாரான அம்சவேணி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் . பாசமிகு தாயாரை இழந்து வாடும் பிரேமலதா விஜயகாந்த், L. K. சுதீஷ் மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அம்சவேணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.
மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை எளிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – டிடிவி தினகரன்