
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது.

தாய் தமிழ் பள்ளிகள் – தமிழக அரசு உதவி வேண்டி கோரிக்கை
தலைநகர் சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் தலைமையிலும், காஞ்சிபுரத்தில் துணைத்தலைவர் மௌர்யா தலைமையிலும், கோயம்புத்தூரில் துணைத்தலைவர் தங்கவேலு தலைமையிலும், மதுரையில் இளைஞரணி மாநிலச் செயலாளர் கவிஞர் சினேகன் தலைமையிலும்,சேலத்தில் மாநிலச் செயலாளர் சிவ இளங்கோ தலைமையிலும், நாகப்பட்டினத்தில் பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் வைத்தீஸ்வரன் தலைமையிலும், திருநெல்வேலியில் நெல்லை மண்டலச் செயலாளர் மருத்துவர் பிரேம்நாத் தலைமையிலும், திட்டக்குடியில் விழுப்புரம் மண்டலச் செயலாளர் ஸ்ரீபதி தலைமையிலும் நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்ட மய்ய உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
ஆடி மூன்றாவது வாரம் – காசிமேட்டில் மீன்கள் விலை உயர்வு
வன்முறையைக் கட்டுப்படுத்த இயலாத மணிப்பூர் மாநில அரசை உடனடியாகக் கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அங்கு அமல்படுத்தவேண்டும். இரு தரப்பிற்கும் நம்பிக்கை தரக்கூடிய தலைவர்களைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.