பேருந்தில் தவறவிட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை , பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்ஷ் கடந்த 25 வருடங்களாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பத்மா. இவர்கள் கடந்த 4ம் தேதி சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள கோவில் திருவிழாவிற்கு சென்று உள்ளனர். பின்னர் குமாரபாளையத்தில் வீடு கட்டுவதற்காக, பத்மா திருச்செந்தூரில் உள்ள தனது வீட்டில் வைத்திருந்த நகைகள் மற்றும் அவரது அக்காவின் நகைகள் என சுமார் 30 லட்சம் மதிப்புள்ள 27.5 நகைகளை எடுத்து வந்துள்ளார். வங்கியில் அடகு வைப்பதற்காக நகைகளை எடுத்துக்கொண்டு , திருச்செந்தூரிலிருந்து அந்தியூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி ஈரோட்டிற்கு பயணம் செய்துள்ளனர். தொடர்ந்து இன்று அதிகாலை ஈரோடு வந்தவர்கள் நகையை வைத்திருந்த பையை பேருந்திலேயே வைத்துவிட்டு கீழே இறங்கி விட்டனர்.
சிறிது நேரம் கழித்து தான் தாங்கள் கொண்டுவந்த நகைப்பையைக் காணாமல் அதிர்ச்சி அடைந்தனர், தொடர்ந்து பேருந்து சீட்டில் இருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் தொடர்ந்து உடனடியாக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து பேருந்து நடத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நடத்துனர் போய் சென்று பார்த்தபோது சீட்டில் நகைப்பை இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து நகைப்பையை அந்தியூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த ஓட்டுனர் துரைசாமி மற்றும் நடத்துனர் சன்ணாசி அவர்களிடம் ஒப்படைத்தனர். நகைகளை பத்திரமாக ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் பொன்னாடை அணிவித்து பாராட்டுக்கள் தெரிவித்தனர். அத்துடன் நகைகள் உரிமையாளர்களிடமும் ஒப்படைக்கப்பட்டது. அரசு பேருந்தில் தவறவிட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான நகைகளை பத்திரமாக ஒப்படைத்த ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், இருவரையும் நேரில் அழைத்து பொன்னாடை போற்றி கௌரவித்தார்.