spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஜவ்வாது மலை பகுதியில் நீர்வரத்து அதிகரிப்பு…பொதுமக்கள் குளிக்கத் தடை…

ஜவ்வாது மலை பகுதியில் நீர்வரத்து அதிகரிப்பு…பொதுமக்கள் குளிக்கத் தடை…

-

- Advertisement -

ஜவ்வாது மலை பகுதியில் கனமழையால் செண்பகத்தோப்பு அணைக்கு 900 கனஅடி நீர்வரத்து வந்துக் கொண்டிருக்கிறது.ஜவ்வாது மலை பகுதியில் நீர்வரத்து அதிகரிப்பு…பொதுமக்கள் குளிக்கத் தடை…திருவண்ணாமலையில் ஜவ்வாது மலை பகுதியில் கனமழையால் செண்பகத்தோப்பு அணைக்கு 900 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கனமழையால் அரக்கோணம் மாவட்டம் பொன்னை ஆற்றில் வினாடிக்கு 6480 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பொன்னை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாதாண்டகுப்பம், பொன்னை, கீரைசாத்து, வெப்பாலை, குகையநல்லூர், திருவலம், வசூர், கொண்டாக்குப்பம், ஏகாம்பரநல்லூர் உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ, துணி துவைக்கவோ வேண்டாம் என்று நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தடாலடியாக குறைந்த தங்கம்…நிம்மதியில் நடுத்தர மக்கள்!

MUST READ