spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதடாலடியாக குறைந்த தங்கம்…நிம்மதியில் நடுத்தர மக்கள்!

தடாலடியாக குறைந்த தங்கம்…நிம்மதியில் நடுத்தர மக்கள்!

-

- Advertisement -

(அக்டோபர் 10) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.

தடாலடியாக குறைந்த தங்கம்…நிம்மதியில் நடுத்தர மக்கள்!

we-r-hiring

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் தடாலடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.165 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,260க்கும், சவரனுக்கு ரூ.1320 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.90,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த  சில நாள்களாக தாறுமாறாக அதிகரித்து வந்த நிலையில், திடீர் சரிவைக் கண்டுள்ளது. தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.  தங்கம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1320 குறைந்திருப்பது சாமானிய மக்களுக்கு சற்றே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. திடீர் சரிவைக் கண்டுள்ள தங்கம் கடந்த 9 நாள்களில் மட்டும் சவரனுக்கு ரூ.4,200 அதிகரித்திருந்தது கவனிக்கத்தக்கது.

ஆனால் வெள்ளி விலை தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. சில்லரை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமிற்கு ரூ.3 அதிகரித்து 1 கிராம் ரூ.180-க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அக்டோபர்  ஒன்றாம் தேதி முதல் இன்றுவரை வெள்ளி ஒரு கிராமிற்கு 19 ரூபாய் வரை விலை உயர்ந்திருக்கிறது. வரும் நாட்களில் விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

என் அடுத்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்தில் தான்…. அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

 

MUST READ