Homeசெய்திகள்தமிழ்நாடுஇலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு

இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு

-

இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு

கை வேதாரண்யம் மீனவர்களை தாக்கி பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த விவகாரத்தில் அடையாளம் தெரியாத இலங்கை கடற்கொள்ளையர்கள் 46 பேர் மீது கடலோர காவல் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Image

 

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆற்காட்டு துறை, வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 21,22 -ம் தேதியில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடல் கொள்ளையர்கள் தமிழ்நாடு மீனவர்களை வழிமறித்து கத்தி, இரும்பு கம்பியால் தாக்கி மீன்பிடி வலைகள், மீன்கள், மற்றும் மீன்பிடி பொருட்களை கொள்ளையடித்து கொண்டு மீனவர்களை விரட்டி அடித்து விட்டு சென்று விட்டனர்.

தாக்குதலில் காயமடைந்த ஆற்காடுதுறை, வெள்ளபள்ளம் மீனவர்கள் 15 பேர் நாகை மற்றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 11 படகு மற்றும் அடையாளம் தெரியாத 46 இலங்கை கடல் கொள்ளையர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

MUST READ