spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு – பள்ளிக் கல்வித்துறை

12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு – பள்ளிக் கல்வித்துறை

-

- Advertisement -

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளாா்.12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு – பள்ளிக் கல்வித்துறைதமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் முக்கிய தேர்வாக அனைவரிடையேயும் எதிா்ப்பார்க்கப்படுகிறது. இப்பொதுத் தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 2 ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 12-ம் வகுப்பு மாணவர்கள் 8.7 லட்சம் பேர் இப்பொதுதேர்வு எழுத உள்ளனர்.12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு – பள்ளிக் கல்வித்துறை12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 2-ம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள், மார்ச் 5-ம் தேதி ஆங்கிலம், மார்ச் 9-ம் தேதி வேதியியல், கணக்கியல் புவியியல், மார்ச் 13-ம் தேதி இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள், மார்ச் 17-ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் ​​& டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங் (பொது), மார்ச் 23-ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம், மார்ச் 26-ம் தேதி தொடர்பு ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் தேர்வுகள் நடைபெற இருக்கின்றது.12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு – பள்ளிக் கல்வித்துறை12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி ஒன்பதாம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியாகும் என கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளாா்.12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியீடு – பள்ளிக் கல்வித்துறைபொது தோ்விற்கான தேதிகள் அறிவித்ததால், மாணவர்கள் எவ்வித பதற்றமும் அடைய தேவையில்லை. உற்சாகத்துடன் தேர்வுக்கு தயாராகுங்கள். மேலும், பன்னிரண்டாம் வகுப்பு கணக்கு பதிவியல் பொதுத் தேர்வுக்கு பல ஆண்டுகளாக கால்குலேட்டர் பயன்படுத்த கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. மாணவர்களின் நீண்ட கால கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், இந்த ஆண்டு கணக்கு பதிவியல் தேர்வில் கால்குலேட்டருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளாா்.

‘கோவையில் மாணவிக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது..’ காவல்துறைக்கு முதல்வர் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!

MUST READ