spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபுதுக்கோட்டை - பெற்றோர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தலைமை ஆசிரியர்

புதுக்கோட்டை – பெற்றோர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தலைமை ஆசிரியர்

-

- Advertisement -

பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நான்கு நாட்களுக்கு பிறகு இன்று திறக்கப்பட்டது.

we-r-hiring

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள பிலிப்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவிகளான சோபியா, தமிழரசி, இனியா, லாவண்யா ஆகிய 4 மாணவிகள் பிப்.15.ல் மாயனூர் காவிரி ஆற்றில் குளிக்கும் போது நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று பள்ளி திறக்கப்பட்டது.

முன்னதாக உயிரிழந்த நான்கு மாணவிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

83 பேர் படிக்கும் இப்பள்ளியில் 4 மாணவிகள் உயிரிழந்த நிலையில் 50 மாணவ மாணவிகள் வந்தனர்.

வெளிப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளிக்கு வந்த உயிரிழந்த மானவிகளின்  பெற்றோர்கள் உடற்கூறு ஆய்வில் அறிக்கையை கொடுத்துவிட்டு பள்ளி திறக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவருக்கு ஆதரவாக இன்னும் சில பெற்றோர்களும் கல்வித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி உதவி தலைமை ஆசிரியை பரிமளா பெற்றோர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட போதும் பெற்றோர்கள் உடற்கூறு ஆய்வை அறிக்கை கேட்டு தொடர்ந்து வாக்குவாத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ