கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு வரும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் புனித் பாண்டியன் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ள நிவாரணத்தொகை முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 61 நபர்கள் உயிரிழந்து உள்ள நிலையில் தொடர்ந்து மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழ்நாடு ஆதி திராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் புனித் பாண்டியன் விசாரணை நடத்தி வருகின்றார்.
இந்த விசாரணையின் போது அவர்களுக்கு எங்கிருந்து விஷ சாராயம் கிடைத்தது என்பது குறித்தும், இந்த பகுதியில் எத்தனை ஆண்டுகளாக விஷ சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது என்பது குறித்தும், தமிழ்நாடு அரசின் சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை கிடைக்க பெற்றுள்ளதா என்பது குறித்தும், குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களின் பொருளாதார நிலை குறித்தும், தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்து வருகின்றார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வு! (apcnewstamil.com)
தொடர்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை ஒவ்வொருவராக தமிழ்நாடு ஆதிதிராவிடர் ஆணையத்தின் துணைத் தலைவர் புனித் பாண்டியன் நேரில் சந்தித்து அவர்களின் குடும்ப சூழ்நிலை குறித்தும் அவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரணத் தொகை சரியாக கிடைத்துள்ளதா என்பதை குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இந்த விசாரணையின் போது கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.