spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவு - ராமதாஸ் இரங்கல்

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவு – ராமதாஸ் இரங்கல்

-

- Advertisement -

தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,“நியூஸ் தமிழ் 24×7 செய்தித் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சகோதரி செளந்தர்யா அமுதமொழி உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். ஊடக உலகில் சாதித்திருக்க வேண்டிய சகோதரி இளம் வயதில் இவ்வுலகை விட்டு பிரிந்தது அவரது குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், நியூஸ் தமிழ் 24×7 தொலைக்காட்சி பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், அனுதாபங்களும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ