Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜய்க்கு திருமா ஆதரவளிக்க வேண்டும் - ராமதாஸ் வேண்டுகேள்

விஜய்க்கு திருமா ஆதரவளிக்க வேண்டும் – ராமதாஸ் வேண்டுகேள்

-

- Advertisement -

தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து புதிய ஆட்சியை ஏற்படுத்த தம்பி திருமாவளவன் உடனடியாக தவெகவிற்கு ஆதரவு அறிக்க வேண்டும் என பாமக நிறுவனர் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வேண்டுகோள் வைத்துள்ளாா்.விஜய்க்கு திருமா ஆதரவளிக்க வேண்டும் - ராமதாஸ் வேண்டுகேள்

தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மையை எட்டுவதற்காக கூட்டணி ஆதரவை திரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் மாநில அரசியலில் ஒவ்வொரு மணி நேரமும் புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.

we-r-hiring

தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க கூடுதல் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அவசியமாக உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், அ.ம.மு.க, அ.தி.மு.க மற்றும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் தரப்பில் நடைபெறும் ரகசிய ஆலோசனைகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர், காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் அந்தக் கட்சியின் பலம் 113 ஆக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு கடிதம் வழங்கியுள்ளன. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவு ஆட்சியமைப்பில் முக்கிய பங்காற்றும் என பார்க்கப்படுகிறது.

ஆனால், வி.சி.க தரப்பு நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், அதனால் ஆதரவு வழங்கும் விவகாரத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் எந்த நிலைப்பாட்டை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், “விஜய்க்கு திருமாவளவன் ஆதரவு அளிக்க வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சமூக நீதி மற்றும் மாற்று அரசியலை முன்னிறுத்தும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே அவரது கருத்தின் பின்னணி என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதனால், தமிழக அரசியல் அடுத்த 24 மணி நேரத்தில் எந்த திசையில் நகரும் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பாரா? வி.சி.க ஆதரவு அளிக்குமா? ஆளுநரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்ற கேள்விகளுடன் மாநில அரசியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

தவெக கொண்டுவர நினைத்த மாற்றம் இதுதானா? திமுக எம்.பி.வலிசன் கேள்வி

MUST READ