மணல்மேடு பஞ்சாலை இடத்தில் ஆயத்த ஆடை பூங்கா?
மணல்மேடு பகுதியில் பாழடைந்த பஞ்சாலை கட்டிடங்கள் உள்ள இடத்தில் ஆயத்த ஆடை பூங்கா அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1965 ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் 42 ஏக்கரில் இயங்கி வந்த பஞ்சாலை 2003 ஆம் ஆண்டு நஷ்டம் காரணமாக மூடப்பட்டது.

தற்போது அந்த இடத்தில் 5 ஏக்கரில் 2014 ஆம் ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. மீதமுள்ள 37 ஏக்கர் நிலம் பாழடைந்த கட்டிடங்களுடன் காடு போல காட்சி அளிக்கிறது.

இந்நிலையில் வேதாரண்யத்தை போன்று ஆயத்த ஆடை பூங்கா அமைப்பது குறித்து திருப்பூர் ஏற்றுமதி உற்பத்தியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் முரளி தலைமையில் மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராஜ்குமார் முன்னிலையில் குழுவினர் ஆய்வு நடத்தினர்.
ஆய்வு அறிக்கையை விரைவில் தமிழ்நாடு அரசிடம் வழங்க உள்ளோம் என்றும் ஆய்வு குழுவினர் தெருவித்துள்ளனர். இந்த இடத்தில் ஆயத்த ஆடை பூங்காவை அமைத்து இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.


