மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பாதித்த பகுதிகளில் இலவசமாக ஆவின் பால் விநியோகம்!
அந்த கடிதத்தில், “கடும் சேதங்களை சரி செய்திட இடைக்கால நிவாரணமாக ரூபாய் 5,060 கோடி வழங்கிட வேண்டும். மிக்ஜாம் புயல் காரணமாக, பெய்த வரலாறு காணாத மழையால் 4 மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. முழு விவரங்கள் சேகரித்த பின்னர் விரிவான சேத அறிக்கை தயாரிக்கப்பட்டு கூடுதல் நிதி கோரப்படும்.
“புறநகர் ரயில் சேவையை நாளை தொடங்க நடவடிக்கை”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
சேதமடைந்தப் பகுதிகளைப் பார்வையிட மத்திய அரசின் குழுவினை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடும் பணி தொடங்கியுள்ளது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.