Homeசெய்திகள்தமிழ்நாடுஆளும் கட்சியினருக்கு தேச உணர்வு இருக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் பேட்டி

ஆளும் கட்சியினருக்கு தேச உணர்வு இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் பேட்டி

-

- Advertisement -

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பில் திமுகவுக்கு எந்த பங்கு இல்லை அனைவருக்கும் தேச உணர்வு இருக்க வேண்டும். முக்கியமாக ஆளும் கட்சியினருக்கு தேச உணர்வு இருக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் பேட்டியளித்துள்ளாா்.ஆளும் கட்சியினருக்கு தேச உணர்வு இருக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்பேட்டிபயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்தின் நடவடிக்கை வெற்றி பெற வேண்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அயோத்யா மண்டபத்தில் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்,  பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் வெற்றி பெற இறைவனை பிராத்திக்கும் வகையில் மகா சண்டி ஹோமம் நடைபெறுகிறது.

பொள்ளாட்சி வழக்கு தீர்ப்பு குறித்த கேள்விக்கு, திமுகவினர் தான் நீதிபதியா? அவர்களா தீர்ப்பு எழுதியது? நீதிபதி சரியான தீர்ப்பு வழங்கி உள்ளார்கள். இதில் திமுகவுக்கு எந்த பங்கும் இல்லை. பொய்யை சொல்லியே 4 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வருகிறார்கள். திமுகவினர் அவர்களுக்கான ஆட்சியை தான் நடத்துகிறார்கள். மற்றவர்களுக்கான ஆட்சியை நடத்துவதில்லை. அனைவருக்கும் தேச உணர்வு இருக்க வேண்டும். முக்கியமாக ஆளும் கட்சியினருக்கு தேச உணர்வு இருக்க வேண்டும். இன்று நடைபெறும் ஒற்றுமை பேரணியில் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று கூறினாா்.

வீராங்கனையான மாணவிக்கு செயற்கை கால்…துணை முதல்வருக்கு நெஞ்சாா்ந்த நன்றி…

 

MUST READ