spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியென பெருகட்டும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

“சமத்துவ பொங்கல் மகிழ்ச்சியென பெருகட்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

-

- Advertisement -

 

we-r-hiring

தமிழ்நாடெங்கும் சமத்துவப் பொங்கல் மகிழ்ச்சியென பொங்கட்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா…. வாழ்த்து தெரிவித்த பிரதீப் ஆண்டனி!

தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பொங்கல் திருநாள் வாழ்த்துச் செய்தியில், “தி.மு.க.வின் அனைத்து நிர்வாகிகளும், அவரவர் பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழர் திருநாளைச் ‘சமத்துவப் பொங்கல்’ என்று பெயரிட்டு எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். கட்சி உடன்பிறப்புகளுக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசுகளை வழங்கிடுங்கள்.

அனைத்து மதத்தினரும், சாதியினரும் கலந்துகொள்ளும் சமத்துவப் பொங்கலாய் இது அமைந்திட வேண்டும். தி.மு.க.வினர் அனைவரது இல்லங்களிலும் ‘சமத்துவப் பொங்கல்’ எனக் கோலமிட்டு, அதனைச் சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்! அதுதான் தலைநகரில் பொங்கல் கொண்டாடும் எனக்கு நீங்கள் தரும் இனிப்பான பொங்கல் வாழ்த்து.

வதந்திகளையே செய்திகளாகப் பரப்பி வாழ்க்கைப் பிழைப்பு நடத்தி வயிறு வளர்க்கக்கூடிய பிறவிகள், என் உடல்நிலை குறித்து பொய்த் தகவல்களைப் பரப்பிப் பார்த்தனர். அந்தப் பொய் உடைந்து நொறுங்கியதால், அடுத்து ஒரு பரபரப்புக்காக, துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவிருக்கிறது என்ற வதந்தியைப் பரப்பத் தொடங்கினர். அதற்குத் தம்பி உதயநிதி அவர்களே பதிலடி கொடுத்து, வதந்தி பரப்பியோரின் வாயை அடைத்துவிட்டார்.

வெற்றி நடை போடும் சிவகார்த்திகேயனின் அயலான்….. ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய நிறுவனம்?

ஜனவரி 21- ஆம் தேதி அன்று சேலத்தில் நடைபெறுகிற இளைஞரணியின் 2- வது மாநில மாநாடு எழுப்புகின்ற ‘மாநில உரிமை மீட்பு முழக்கம்’ டெல்லி வரை அதிரட்டும். திசை திருப்பும் வதந்திகளில் கவனத்தைச் சிதறடிக்காமல், மாநாட்டின் மைய நோக்கமான, மாநில உரிமை மீட்பு முழக்கத்தை முன்னெடுங்கள். நாடு தழுவிய அளவில் அதுவே முதன்மைச் செய்தியாகட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ