
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் (வயது 55) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
ராயன் படத்திற்காக சூப்பரான ஸ்கெட்ச் போட்ட தனுஷ்…… தினமும் ஒரு போஸ்டர் ஏன்?
உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சாந்தன் உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
திருச்சி சிறப்பு முகாமில் இருந்த சாந்தன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்ட சாந்தன் இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தார். சாந்தன் இலங்கைக்கு செல்வதற்கு மத்திய அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.
காரைக்குடி சால்வை சம்பவத்துக்கு எதிரான கண்டனங்கள்… வருத்தம் தெரிவித்த சிவகுமார்!
தீவிர மருத்துவ சிகிச்சை அளித்த போதும் காலை 07.50 மணிக்கு உயிர் பிரிந்ததாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்தார் சாந்தன் என்பது குறிப்பிடத்தக்கது.