Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசு பேருந்துகளில் நிரம்பிய இருக்கைகள்-போக்குவரத்துத் துறை

அரசு பேருந்துகளில் நிரம்பிய இருக்கைகள்-போக்குவரத்துத் துறை

-

- Advertisement -

பொங்கல் பண்டிகையொட்டி சொந்த ஊர் செல்ல அரசு பேருந்துகளில் இதுவரை 1.64 லட்சம் பேர் முன்பதிவு செய்து இருப்பதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

we-r-hiring

பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடபட உள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை தொடர்ந்து 16, 17 ஆம் தேதிகளில் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் என அரசு விடுமுறை நாட்களுடன் பொங்கல் விடுமுறையும் இணைந்து 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள், ரெயில்களில் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டனர்.

சென்னையில் இருந்து செல்லக்கூடிய வழக்கமாக ரயில்கள் மட்டுமின்றி சிறப்பு ரயில்களிலும் முன்பதிவு நிரம்பி விட்டன.

இந்நிலையில், பொங்கலையொட்டி வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இந்த ஆண்டும் சென்னையில் இருந்து 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 10,749 சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிற ஊர்களில் இருந்து 6,182 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாட வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அரசு விரைவு பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு கடந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கியது.

பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.

பொங்கலுக்கு இன்னும் ஒரு இரண்டு நாட்களே இருப்பதால் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வரும் 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இரவில் புறப்பட்டு செல்லக்கூடிய அரசு விரைவு பேருந்துகளும் அனைத்தும் நிரம்பிவிட்டன.

குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, திருச்சி ஆகிய தென் மாவட்டப் பகுதிகளுக்கும், தேனி, திண்டுக்கல், கும்பகோணம், தஞ்சாவூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் பெரும்பாலும் இருக்கைகள் நிரம்பி விட்டன.

எனவே, பொங்கல் பண்டிகையொட்டி பயணம் மேற்கொள்வோர் இதுவரை 1.64 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதில் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு 73,470 பேரும், பிற மாவட்டங்களுக்கிடையே 90,881 பேரும் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் இருந்து இரவில் இயக்கக் கூடிய 300 விரைவு பேருந்துகள் முழுமையாக நிரம்பிவிட்டன பகல் நேர பேருந்துகளில் ஒரு சில இருக்கைகள் மீதமிருப்பதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகளின் வருகைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிட்டு இருப்பதாக போக்குவரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 5 இடங்களில் இருந்து பேருந்துகள் பிரித்து இயக்கப்படும் நிலையில் பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இன்று முதல் 340 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ