
நாடாளுமன்றத்தில் தொடர் அமளில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு, “நாடாளுமன்றத்தில் 100- க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. புதிய நாடாளுமன்றத்திற்கு புதியதாக பாதுகாவலர்களை நியமிக்கவில்லை. பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக, விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் காற்றில் பறக்கவிட்டுள்ளனர்.
ஆவடியில் ரூ.10.4 கோடியில் கால்வாய் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆவடி சா.மு. நாசர் தொடங்கி வைத்தார்
நாடாளுமன்ற பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்வது ஏற்புடையது அல்ல. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரிய விளக்கம் அளிக்க வேண்டும். விசாரணை நடத்தப்படும் என்று சொல்கிறார்கள்; ஆனால் எந்த மாதிரியான விசாரணை நடத்தப் போகிறார்கள்? நாடாளுமன்றத்தில் பாதுகாப்புக் குறைபாடு இல்லை என்பதை எப்படி ஏற்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.