
சென்னை அம்பத்தூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் அமைச்சர் சேகர் பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்துகொண்டு பொதுமங்களுக்கு வேட்டி, சேலை, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கினார்.

சென்னை அம்பத்தூர் அடுத்த கொரட்டூரில் அம்பத்தூர் கிழக்கு பகுதி செயலாளர் MTR நாகராஜன் தலைமையில் திமுக சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி கே சேகர்பாபு சென்னை மாநகராட்சி மேயர் திருமதி பிரியா , அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், கழக நிர்வாகிகள் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.

இந்த விழாவினை சிறப்பிக்க சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் இந்து அறநிலையத்துறை அமைச்சருமான PK. சேகர்பாபு கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்து நிர்வாகிகளுக்கு வேட்டி சட்டை புடவை, கரும்பு, பரிசுப் பொருட்கள் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார். இதில் அம்பத்தூர் மாமன்ற தலைவர் பி கே மூர்த்தி பகுதி செயலாளர்கள் டிஎஸ்பி ராஜகோபால் வட்ட செயலாளர்கள் ,பகுதி நிர்வாகிகள் தொழிலாளர் துறை மற்றும் தொழில்நுட்பத் துறை, திமுக கழக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
