spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை - ஓடிசா இளைஞர் கைது

கோவையில் கஞ்சா சாக்லேட் விற்பனை – ஓடிசா இளைஞர் கைது

-

- Advertisement -

கோவை அருகே கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை, கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக பெரியநாயக்கன் பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்  மதுவிலக்கு அமலாக்க பிரிவுகாவல் துறையினர் கீரணத்தம் பகுதியில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

we-r-hiring

அப்போது ஓடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சயகுமார் சமல் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, சஞ்சயகுமார் சமலை கைது செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவுகாவல் துறையினர், அவரிடமிருந்து ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் ருபாய் மதிப்புள்ள சுமார் 34 கிலோ கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைதான நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

MUST READ