செமிகண்டக்டர் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழ்நாட்டில் உயர்திறன் சிறப்பு மையம் ஒன்றை அமைக்க டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனை மையத்தை அமைக்க டெண்டர் கோரியுள்ளது டிட்கோ நிறுவனம். மொத்தம் ரூ.100 கோடி செலவில் உருவாகவுள்ள இந்த மையத்துக்கு, டிட்கோ சார்பில் ரூ.75 கோடி நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
செமிகண்டக்கர் உற்பத்தித் துறையை ஊக்குவிக்க, தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் சோதனை மையம், வடிவமைப்பு மையம் மேலும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான திறன் பயிற்சி வழங்கும் மையங்கள் உள்ளிட்டவை இதில் அமைகிறது. இதன் மூலம், மாநிலத்தில் தொழில் நிறுவனங்கள் செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனையில் நேரடியாக பலனடையவும், தமிழ்நாட்டின் மின்னணு உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகவும் வாய்ப்புள்ளது.
இபிஎஸ் டெல்லி பயண ரகசியம்! ஒபிஎஸ் கட்சியில் கேட்கும் அந்த பதவி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!
