
நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது என்று உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார்.

விஜய்க்கு வாக்களிப்பேனா என தெரியாது… நடிகர் அர்ஜூன் தாஸ் பளிச் பதில்…
சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14- ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (பிப்.15) மாலை 04.00 மணிக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததை தவிர வழக்கில் எந்த மாற்றமும் இல்லை. சாட்சிகளை இன்னும் விசாரிக்காத நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தந்தால் சாட்சிகளைக் கலைக்கக் கூடும். முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையை தொடங்க தயாராக உள்ளோம்.
வெற்றிமாறன் படத்தில் நடிக்கும் கவின்… அடுத்தடுத்து அதிரடி கிளப்பும் கவின்…
நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைக்காத செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது. ஜாமீன் மனு விசாரணை தொடங்கும் ஒரு நாளுக்கு முன்பு தான் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இதையடுத்து, அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு பதில் வாதத்திற்காக வழக்கு விசாரணையை வரும் பிப்ரவரி 19- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.