spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு'செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது செப்.20- ல் தீர்ப்பு வழங்கப்படும்' என அறிவிப்பு!

‘செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது செப்.20- ல் தீர்ப்பு வழங்கப்படும்’ என அறிவிப்பு!

-

- Advertisement -

 

'செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது செப்.20- ல் தீர்ப்பு வழங்கப்படும்' என அறிவிப்பு!
File Photo

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வரும் செப்டம்பர் 20- ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

we-r-hiring

அண்ணா பிறந்தநாள்- காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், அவரது தரப்பு மனுத்தாக்கல் செய்திருந்தது.

ஜாமீன் கோரிய வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது மனைவி ஆகியோரின் தரப்பு வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்தது. குறிப்பாக, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.

அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பா.ஜ.க.வின் அழுத்தம் காரணமாகவே உள்நோக்கத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரமோ, சாட்சிகளோ இல்லை. அமலாக்கத்துறைக் கூறும் குற்றச்சாட்டுகள் மாநில அரசின் மத்திய குற்றப்பிரிவில் இருந்து பெறப்பட்டவை” என்று வாதிட்டார்.

ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி ரூ.1,000 வரவு வைக்கப்படும்- தமிழக அரசு

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது வரும் செப்டம்பர் 20- ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி அறிவித்துள்ளார்.

MUST READ