
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதற்கான காரணங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
காரைக்குடி சால்வை சம்பவத்துக்கு எதிரான கண்டனங்கள்… வருத்தம் தெரிவித்த சிவகுமார்!
சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூன் 14- ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், கடந்த ஜூன் 16- ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
மருத்துவ சிகிச்சைத் தொடர்பான காரணங்களை சுட்டிக்காட்டி, அவரது ஜாமீன் மனுவை நீதிபதி எஸ்.அல்லி தள்ளுபடி செய்தார். பின்னர் செப்டம்பர் 20- ஆம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவர் மீதான குற்றச்சாட்டுகளை முன் வைத்து ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்தது.
ராயன் படத்திற்காக சூப்பரான ஸ்கெட்ச் போட்ட தனுஷ்…… தினமும் ஒரு போஸ்டர் ஏன்?
அதே ஆண்டில் அக்டோபர் 19- ஆம் தேதி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, அவர் சாட்சிகளை கலைக்கக்கூடும் என்ற காரணத்திற்காக ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தை அணுகிய போது, உடல்நிலையைக் காரணம் காட்டி ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி, நீதிபதிகள் நவம்பர் 28- ஆம் தேதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து, 2024- ஆம் ஆண்டு ஜனவரி 12- ஆம் தேதி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அணுகினார். முந்தைய ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட பின் சந்தர்ப்ப சூழ்நிலையில் மாற்றம் ஏற்படவில்லை எனக்கூறி, மனுவை நீதிபதி எஸ்.அல்லி தள்ளுபடி செய்தார்.
காரைக்குடி சால்வை சம்பவத்துக்கு எதிரான கண்டனங்கள்… வருத்தம் தெரிவித்த சிவகுமார்!
செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரிக்கப்பட்ட நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று (பிப்.28) தீர்ப்பு வழங்கவுள்ளார்.