உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பக்காவாக பிளான் போட்ட அமலாக்கத்துறை! படுத்துக்கொண்டு காலி செய்த செந்தில்பாலாஜி!பரபரப்பு பின்னணி
அமலாக்கத்துறை கைதின் போது, நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என்று கோரி அமைச்சரின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டனர். சிகிச்சையை அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவக் குழுவும் ஆராயலாம் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனையடுத்து, சிறைத்துறை மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கைகள் முடிந்த பின்னர், செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான பணிகளை மருத்துவர் குழு மேற்கொண்டுள்ளது.
செந்தில்பாலாஜியின் உயிருக்கு ஆபத்தா? உச்சநீதிமன்றத்தை எதிர்க்கிறாரா ஸ்டாலின்?
செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு வெளியே காவல்துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.