
தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணிக்கு அவரது மகள்கள் வீடு வீடாக சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத் அணிக்கு 164 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ அணி!
தருமபுரி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணி அந்த தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் தொடர்ந்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். சௌமியாவுக்கு அவரது கணவரும் பா.ம.க. தலைவருமான அன்புமணியும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
குஜராத் அணியை வீழ்த்தி லக்னோ அணி அபாரம்!
இந்த நிலையில், தருமபுரி மதிவம்பாளையம் பகுதியில் அன்புமணியின் மகள் சஞ்சித்ரா மற்றும் சங்கமித்ராவும் தனது தாய் சௌமியாவுக்காக வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரித்தனர். அப்போது, அவர்கள் இருவரும் அங்கு வந்து சிறுவர்களுடன் இயல்பாக விளையாடிக் கொண்டே ஆதரவுத் திரட்டினர். இதனால் அன்புமணியின் மகள்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வரவேற்றனர்.