spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!"

“தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!”

-

- Advertisement -

 

மக்களே உஷார்...கரையை நெருங்கும் மிக்ஜம் புயல்!

we-r-hiring

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்- உயர்நீதிமன்றக் கிளையில் இன்று விசாரணை!

தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, காரிக்கோட்டை, பாமணி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சுற்றுப்பகுதிகளிலும் பரவலாக தற்போது மழை பெய்து வருகிறது.

தமிழகம் முழுவதும் 104.51% பேருந்துகள் இயக்கம்!

இந்த நிலையில், “தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் இன்று (ஜன.09) முதல் மழை பெய்ய தொடங்கும்; நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (ஜன.09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது; தென் மாவட்டங்களில் கனமழை பெய்தாலும் அச்சப்படும் வகையில் இருக்காது; பொங்கலுக்கு பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்” என தனியார் வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

MUST READ