spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம்…

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம்…

-

- Advertisement -

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நாளை மற்றும் நாளை மறு நாள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க நாளை மற்றும் நாளை மறுநாள்  சிறப்பு முகாம்…எஸ்ஐஆர் கணக்கெடுப்பு பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் இருந்து 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர். முகவரியில் இல்லாதவர்கள் என 66.44 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க 2 கட்டமாக சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று என்று தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதன்படி, கடந்த 27, 28-ம் தேதி முதல் கட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் மொத்தம் 7.17 லட்சம் சேர் விண்ணப்பங்களை சமர்பித்து இருந்தனர். இதில் பெயர் சேர்க்க மட்டும் 5,58,264 பேர் விண்ணப்பங்களை சமர்பித்து இருந்தனர்.

we-r-hiring

இந்நிலையில், 2வது கட்ட சிறப்பு முகாம் நாளை மற்றும் நாளை மறு நாள் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 75 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. தற்போது வரை வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க 7,37,807 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இந்த 2 நாள் முகாமில் அதிக விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர் மழையால் குற்றாலத்தில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

MUST READ